Tuesday, November 12, 2013

Pre-production


சினிமா தயாரிப்பின் ஒவ்வொரு புள்ளியும் pre-production-ல் மிக கவனமாக திட்டமிடப்படுகிறது. 

திரைப்படத்தின் கதை - Story

     ஒரு தயாரிப்பாளர் தான் எடுக்கப்போகும் திரைப்படத்தின் கதையை முடிவு செய்கிறார். அது தனது கற்பனையில் தோன்றியிருக்கலாம், ஒரு திரைப்படத்தை பார்க்கும்போதோ, ஒரு நாவலை படிக்கும்போதோ அல்லது ஒரு இயக்குனரின் கதை பிடித்துபோய் அதை திரைப்படமாக எடுக்க முன்வரலாம்  அல்லது ஒரு சின்ன idea வாக இருக்கலாம் எதுவாயினும் அந்த கதை தயாரிப்பளருக்கு பிடிக்கவேண்டும்.

திரைக்கதை - Screenplay

     கதாசிரியரின் கதையை திரை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது திரைக்கதை. இயற்கையாகவே ஒரு கதையை கேட்கும்போது அதன் visual காட்சி நம் மணக்கண்ணில் தோன்றுவது இயல்பு அதை திரைப்படுத்துவதற்க்கான இன்னொரு எழுத்தின் வடிவம் திரைக்கதை என்றே நான் கருதுகிறேன்.

படக்கதை - Storyboard  (படக்கதை என்ற சொல் சரியா?)

     ஸ்டோரி போர்டு என்பது கதையை ஒரு முன்னோட்டமாக பார்க்க ஏதுவாக அல்லது கதையை நாம் எப்படி சொல்ல போகிறோம் என்பதற்கான வழிமுறை என்றே கருதுகிறேன். ஒரு காட்சி எப்படி அமைய வேண்டும் என ஒரு ஓவியரின் உதவியோடு முன்னேற்ப்பாடக ஓவியமாக வரைந்து கொள்வது ஸ்டோரி போர்டு (ஒரு கட்டிடத்தின் ப்ளுப்ரின்ட் போல).

வரவு செலவு திட்டம் - Budget

     கதைக்கு தேவையான budget அல்லது budget-க்கு ஏற்ற கதை எதுவானாலும் கதைக்கான நியாயம் மறுக்கப்படக்கூடாது என்றே கருதுகிறேன். ஒரு கதையின் செலவு அது திரைப்படமாக வெளிவந்து அது எவ்வளவு சம்பாதித்து தரும் என்ற தயாரிப்பாளரின் கணிப்பையொட்டியே தீர்மானிக்கப்படுகிறது. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் என்ன செலவு பிடிக்கும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டால் அந்த செலவு மிகாமல் பார்த்துகொள்வது மிக முக்கியம் அந்த பொறுப்பு இயக்குனரையே சாரும் ஆனால் வரவு செலவு மற்றும் அன்றன்றைய திட்டமிடலின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா  என்பவை  production மேனேஜரை சாரும் என்றே கருதுகிறேன்.

குழு - Team / Crew

     கதைக்கேற்ற அல்லது கதைக்கு தேவையான நடிக நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், அவர்களது உதவியாளர்கள் மேலும் திரைப்பட தயாரிப்பின் போது தேவைப்படும் வசதிகளை செய்து தருவோர் என ஒவ்வொரு இலாக்காவிலும் தேர்வு செய்வது என்பது தனிஒரு கலை அதுவும் budget-க்குள்.

திட்டமிடல் - Schedule

     தளம் சார்ந்த திட்டமிடல், நடிகர் சார்ந்த திட்டமிடல், நேரம் சார்ந்த திட்டமிடல் என  சரியாக திட்டமிடுதல் என்பது முதல் லாபம் என்றே சொல்லவேண்டும்.
Some Checklists - Location Survey Checklist, Crew Deal Memo, Cast List., Crew List, Contact List, Daily Call Sheet,



(பதிவுகள் அனைத்துமே உங்களின் பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்தப்படும்)

Friday, September 20, 2013

Introduction



சினிமா தயாரிப்பில்  மூன்று முக்கிய வார்த்தைகள் அடிக்கடி அடிபடும் அது,

1. Pre-production
2. Production
3. Post-production

சினிமாவின் வியாபாரத்திற்குள் போகாமல் சினிமா தயாரிப்பை மேற்கூறிய மூன்று வகையாக பிரிக்கலாம் .

Pre-production

என்னை பொறுத்தவரை Pre-production வேலைகளை சரியாகமுடித்துவிட்டால் படத்தின் வெற்றி துவங்கிவிட்டது என்றே கருதுகிறேன்.

Pre-production அப்படின்னா என்ன?

 ஒரு வீடு கட்டுரத்துக்கு முன்னாடி ஒரு வீடு எப்படி வரணும் எங்க என்ன மாதிரி அறைகள் வேணும் அகலம் எவ்வளவு நீளம் எவ்வளவுன்னு ஒரு பிளான் போடுவோம் அப்புறம் அதற்கேற்றால்போல் எதனை அடி குழி வெட்டனும் சாரம் எவ்வளவு போடணும் கல் எவ்வளவு வேணும் சிமெண்ட் எவ்வளவு வேணும் இன்னும் மணல் ஜல்லி மரம் அதுமட்டுமில்லாம ஆட்கள் எத்தன பேர் வேணும் அவர்களுக்கான தேவைகள்ன்னு நாம தயாராகவேண்டியது எவ்வளவோ இருக்கு. 

 அதே மாதிரிதான், சினிமா எடுக்குறதுக்கு முன்ன என்ன கதை, அந்த கதைக்கு என்னெல்லாம் வேணும்னு நாம அதுக்கு Pre-production

 இதுல முக்கியமா நாம பார்க்கபோறது.
 கதை - Story, திரைக்கதை - Screenplay, Storyboard, Location, Sets and Properties, Budget, Schedule

Production

சினிமாவில் Production என்பது ஷூட்டிங். கதையை விஷுவலாக்குறதுதன் Production. இதுல முக்கியமா நாம பார்க்கபோற  கேமரா -  Camera, லென்ஸ் -  Lens, கேமரா கருவிகள் - Gears, விளக்குகள்  - Lights, ஒளித்ததடுப்பான்கள் - Filter, மின் சக்தி  - Power Sources, புகைப்பட கலைஞர் - Stills மட்டுமல்லாது படப்பிடிப்பு தளத்தின் வசதிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து என இது ஒரு நகரும் தொழிற்சாலை.
     

Post-production

நமது படைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாது அதன் வியாபாரத்திற்கு பெரிதும் உதவுவது  Post-production. இதில் எடிட்டிங் -  Editing,  Visual Effects,  Sound Effects,  Music, Animations,  DI
மட்டுமில்லாது போஸ்டர் டிசைன் விளம்பரம்னு நிறைய இருக்கு.

அடுத்தடுத்த பக்கங்களில் விரிவாக பேசலாம்... 

(பதிவுகள் அனைத்துமே உங்களின் பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்தப்படும்)

Why Film make king


1878 - ஆம் இந்த ஆண்டில்தான் திரைப்படம் பிறந்தது.
1896, ஜூலை 7 பம்பாயில் 6 ஊமைப்படங்கள் திரையிடப்பட்டது.
1912, மே 18 இந்தியாவில்  Shree Pundalik  பம்பாயில் திரையிடப்பட்டது.
1913, மே 3 இந்தியாவின் முதல் முழுநீள திரைப்படம் திரையிடப்பட்டநாள். இந்திய திரைப்படங்களின் தந்தை எனக்கொண்டாடப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் தயாரிப்பில் உருவான ராஜா ஹரிச்சந்திரா எனும் ஊமைப்படம்தான் அது. ஒரே ஒரு பிரிண்ட் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதில் பெண்ணாக (அதாவது ஸ்த்ரிபார்ட் என்பார்கள் ) ஆண் நடிகர்கள் நடித்தார்கள்.

இப்படி துவங்கிய நமது சினிமா இன்று செல்போனில் படமெடுக்குமளவுக்கு மாறிவிட்டது. 

ok சினிமா மேல் காதல் கொண்ட நாள் முதல் இந்நாள் வரை நான் என்னவெல்லாம் கற்றுக்கொண்டேனோ அதை இங்கே பதிவு செய்கிறேன்.
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் அல்லது உங்கள் பின்னூட்டம் மூலமாக நான் கற்றுக்கொள்ளலாம், என்னை சரிசெய்து கொள்ளலாம்  ஆகவே இனி சினிமா பற்றி பேசலாம்.

இது திரைப்படத்தின்பால் காதல் கொண்ட ஒரு திரைப்படமாணவனின் குறிப்புகள்.