Monday, February 24, 2014

Checklist for Screenplay

கதை சுவாரஸ்யமாக இருக்க நமது கதையில் கீழ்காண்பவை பற்றிய தெளிவு அவசியம்.
1.    கதை எதைபற்றியது
2.    கதையின் முடிவு
3.    30/60/30 என நேரமும் பக்கங்களும்.
4.    முதல் 10 நிமிடங்களுக்குள் முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்.
5.    முதல் 10 நிமிடங்களுக்குள் முக்கிய பிரச்சினை ஆரம்பம்.
6.    Plot point 1 and 2 முறையே அங்கம் 1 மற்றும் 2 னுள்
7.       Show, don’t tell ‘Cause screenplay is nothing but, story told in pictures.
8.    ஒவ்வொரு சீனும் கதையை நகர்த்த, விருவிருப்பாக்க.
9.    ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு நியாயம்.

மேலும்சில. 

இன்றைய காலகட்டதில் 60க்கு மிகாத சீன்களும் 2 முதல் 2.30 மணி கால அளவு போதுமானது.

Enter the scene and Leave early –இப்போதெல்லாம் காட்சிகள் crisp பாக இருக்கவேண்டும். இப்பொதெல்லாம் வெளியூர் செல்வதை காட்ட பெட்டி படுக்கையெல்லாம் கட்டவேண்டியதே இல்லை.

கதைக்கேற்ற காட்சி மாற்றம் சுவாரஸ்யம் கூட்டும். கதையை விட்டு காட்சி மாறுவது கதையை தொய்வடைய செய்யும்.

முக்கியமானது திரைக்கதை எழுதும்போது இயக்குநராகிவிடாதீர். காமிரா கோணம், லைட்டிங், காட்சிகளின் டெம்போ பற்றி இயக்குநர் கவலைபட்டுகொள்வார் ஏனென்றால் கதை திரைக்கதையாவது போல் திரைக்கதை படமாவது இன்னொரு மேஜிக் அதை நிகழ்த்த வேண்டியது இயக்குநர்.   

And REWRITE.


தொடர்ந்து பார்க்கலாம் – திரைப்பட மாணவன்

Act 3/ End / Resolution

முடிவு / அங்கம் 3 / Act 3/ End / Resolution = 30pages =30minuts

”நல்ல படம் க்ளைமாக்ஸ்ல சொதப்பீட்டாண்டா” என்று பார்வையாளர் சொல்லி பலபடங்கள் தோல்வியடைய காரணமிந்த முடிவு. முக்கிய கதாபாத்திரத்தின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா? பிரச்சினைகளின் முடிவு என்ன? முடிவு என்பது இறுதி காட்சியல்ல.       

பெரும்பாலும் சுமூகமான முடிவைதான் பார்வையாளர் விரும்புகிறார் இல்லையென்றாலும் நியாயம் ஜெயிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பார்வையாளரின் எண்ணமாக இருக்கிறது. இல்லை என் படத்தில் எதார்த்தம் ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்கான நியாயம் படத்திலிருக்க வேண்டும்.

எதார்த்தமான முடிவுகள் தோற்பதற்கு காரணம் சாமானியனின் வாழ்வில் நடப்பதையே பிரதிபலிப்பதால் இருக்கலாம்.  தான் வஞ்சிக்கப்பட்டதைபோல் கதையில் ஒருவன் வஞ்சிக்கப்படுவது அவனுக்கு நெருக்கமானதாக இருந்தாலும் தன்னால் வெல்ல முடியாததை நாயகன் வெல்ல வேண்டும் என்றே பார்வையாளர் விரும்புகிறார்.

அதற்காக திடீரென்று சம்பந்தமே இல்லாத ஒரு கதாபாத்திரம் முன்வந்து எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பது பலசமயங்களில் பயன் தராது. அதேபோல் நாயகன் திடீரென்று குதித்து கதாநாயகியை காப்பாற்றுவதெல்லாம் மலையேறிவிட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு நியாயம் வேண்டும்.  கடைசியில் போலீஸ் வரவேண்டுமென்றால் போலீஸுக்கு தகவல்வந்தது எப்படி? அவர்கள் எப்படி வந்தார்கள் என்பதையும் காட்ட வேண்டும் அதே நேரத்தில் காட்சியை விறுவிறுப்பாக்கவும் அமைக்கவேண்டும்.

தங்கமீன்களின் முடிவில் கல்யாணி வருவதற்குள் செல்லம்மா குளத்தில் இறங்கிவிடுவாளா? என்ற பதட்டத்தில் நமது மனநிலை மாறிமாறி அல்லல்படும் அந்த அளவிற்கு அருமையான தொகுப்பு அது. அதே நேரத்தில் சில விசயங்களை சொல்லாமல் விடுவதும் அழகு அதில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும் சந்தேகத்தோடு நம்பிக்கைபோல் ஒருஎதிர்பார்ப்பு கிளம்பும் தங்கமீன்களில் கல்யாணி நாயை வாங்கினாரா? என்பது போல்.


Ok தொடர்ந்து திரைக்கதையை ஆரம்பிக்கும் முன் ஒரு check list பார்க்கலாம் - திரைப்படமாணவன்

Friday, February 21, 2014

ACT 2 / Middle / Confrontation

இடை நிலை / அங்கம் 2 / ACT 2 / Middle / Confrontation / 60 pages / 60 minutes
 இது முதலாவது அங்கத்தின் தொடர்ச்சியாகவும் 3வது அங்கத்தின் காரணமாகவும் Interval Blockக்கு ஆதாரமாக இருக்க வேண்டும். கதையின் காட்சிகள் அனைத்துமே கதையை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும். கதையை இன்னும் விருவிருப்பாக்க இந்த பகுதியில் சிறப்பான காட்சிகளால் நிறப்பப்பட வேண்டும். இங்கே தொய்வு ஏற்பட்டால் “என்னடா இந்த இழுஇழுக்குறான்ஞ” என்று பார்வையாளர் கொட்டவி விட ஆரம்பித்து விடுவார்.
 இதை தங்கமீன்களில் கொஞ்சம் Reverseல்  பார்ப்போம்
Intervalலில் கல்யாணி வீட்டை விட்டு வெளியேருகிறான் – ஏன்? அவன் அப்பாவிடம் அறை வாங்குகிறான் –  ஏன்? பள்ளிக்கூடத்தில் பிரச்சனை செய்கிறான் – ஏன்? பள்ளிக்கூடத்தில் செல்லாம்மாவிற்கு W என பெயர் வைக்கிறார்கள்.
   .   3ம் அங்கத்தில் Rain Maker தேவை - Rain Maker ஐ கொண்டுவந்தால் 25000ரூபாய் கிடைக்கும் – 25000ரூபாய் இருந்தால்தான் வோடாபோன் நாய் கிடைக்கும் – வோடாபோன் நாய் இருந்தால்தான் பிறந்தநாளுக்கு மகளுக்கு பரிசாய் தர இயலும் – அதற்கு பிறந்த நாள் வர வேண்டும் – அன்றைய பரிசாக வோடாபோன் நாயை மகள் பரிசாக கேட்கவேண்டும்.
 இப்படி ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகளாக இருக்க வேண்டும். தொடர்ந்து அங்கம் 3ஐ பார்க்கலாம் - திரைப்பட மாணவன்

Plot point

Plot point
Incident, episode or event - that hooks in to the action and spins it around in another direction. – Syd field எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் திருப்புமுனை அது. ஒரு கதைக்கு எத்தனை Plot point  வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அதில் முக்கியமானதை Syd field, Plot point 1 மற்றும் Plot point 2 என்று குறிப்பிடுகிறார்.
 வாழ்க்கையில் சுவாரஸ்யம் எது பிரச்சனையை எதிகொள்வது பிரச்சினையே இல்லையென்றால் அதில் சுவாரஸ்யமே இல்லை. இரண்டாவது அங்கமான Confrontation ல் நடக்கும் சம்பவங்களின் ஆதாரச் சம்பவம் Plot point 1 இது கதையின் முதல் அங்கத்திலேயே வந்துவிட வேண்டும் மூன்றாவது அங்கமான முடிவை நோக்கிச் செல்ல ஆதாரச் சம்பவம் Plot point 2.நமது இந்திய சினிமாக்களில் Interval நோக்கி செல்ல Plot point 1 ஆதாரமாக இருக்கும் Climax  நோக்கி செல்ல Plot point 2 ஆதாரமாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னதுபோல்
 இவந்தனே அப்பன் – என தந்தை சொல்ல 2000ரூபாயின் தேவை கல்யாணிக்கு வந்து விடுகிறது. இரண்டாவது அங்கம் அவனது 2000ரூபாய் தேடலுக்கான சம்பவங்களும் உபசம்பவங்களுமே. செல்லம்மா தன் தந்தையிடம் வோடாபோன் நாய்குட்டி வாங்கிவரச் சொல்வது மூன்றாம் அங்கமான முடிவின் ஆதாரம். இங்கே முடிவு என்பது இறுதி காட்சி அல்ல.

Thursday, February 20, 2014

The Beginning / Setup / Act 1

திரைக்கதையை ஆரம்பிக்கும்முன் நாம் தெளிவாக இருக்கவேண்டியவை.

1.    கதையின் முக்கிய கதாபாத்திரம் யார்?
2.    கதை எதை பற்றியது?
3.    கதையின் முடிவு என்ன?

உதாரணம் – 2013ம் ஆண்டில் பல விருதுகளை வாங்கிய என் துரோணாச்சாரியார் இயக்கிய >@>தங்கமீன்கள்<@<
கதை எதைப்பற்றியது – இன்றைய சமுதாய சூழலில் குழந்தையும் கல்வியும்

துவக்கம் /அங்கம் 1 / Act 1 / Beginning / setup = 30pages =30minuts

கதை ஒரு புள்ளியில் துவங்கி அது படிப்படியாக பல தடைகளை தாண்டி இறுதிகட்டத்துக்கு செல்லும். அந்த புள்ளி ஒரு சம்பவமாகவோ, ஒரு நிகழ்வாகவோ அல்லது ஒருவரின் செயலாகவோ இருக்கலாம் ஆனால் கதையின் முடிவு பற்றி நாம் தெளிவாக இருந்தால்தான் கதையை சிறப்பாக துவக்கமுடியும்.

ஒரு நல்ல துவக்கம்

இறுதியில் தங்க மீனாக ஆசைப்பட்டு செல்லம்மா குளத்தில் இறங்க வேண்டும் என்ற முடிவுதான் இங்கே துவக்கதிற்கு ஆதாரம். கதையை எப்போது ஆரம்பிப்பது? அது கதையை பொறுத்தது என்றாலும் விரைவாக ஆரம்பித்தலே நலம் இல்லையென்றால் படத்த போடு என்று பார்வையாளர் சத்தம் போடுவார். சிலர் முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுவார்கள்.

திரைக்கதை என்பது தகவல்களால் நிறைந்தது. தங்க மீன்களின் முதல் காட்சியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள்.
1.    தங்கமீன்களின் மேல் செல்லம்மாவிற்கு இருக்கும் ப்ரியம்.
2.    வீட்டிற்கு தெரியாமல் அவள் வெளியே வருவது.
3.    மகளுக்காக எந்த ஆழத்திலும் இறங்கும் கல்யாணி.
4.    இதுவரைக்கும்தானே வந்திருக்கு எனும் செல்லம்மாவின் வெகுளித்தனம்.
5.    தந்தைக்கு ஒண்றென்றால் பதறிவிடும் செல்லம்மா.  
      
   இப்படி நிறைய...

கதையின் மையத்தை நோக்கிய ஆரம்பம்

கதையின் மையம் - 2000ரூபாய்க்கு கூட வழியில்லாத கல்யாணிக்கு 25,000ரூபாய் தேவை

முதல் 30 நிமிடங்களிலேயே கதையின் மையத்தை பார்வையாளருக்கு விளக்கிவிட வேண்டும். அதற்க்கான முக்கிய காட்சி முதல் 10 நிமிடங்களுக்குள் வந்துவிட வேண்டும்.

இவந்தனே அப்பன் – என தந்தை சொல்ல 2000ரூபாயின் தேவை கல்யாணிக்கு வந்து விடுகிறது. இனி அவன் 2000ரூபாயை நோக்கி ஓடுவான்.

முக்கிய கதாபாத்திரம் / Protogonist

முக்கிய கதாபாத்திரம் என்பது அதன் தேவையையும் அதை கதையில் செலுத்துவது எது என்பதையும் பொருத்தது. அது நாயகனாகவோ வில்லனாகவோ நாயகியாகவோ ஏன் குரங்காகவோ நாயாகவோக்கூட இருக்கலாம். அது தனது விருப்பத்தை பல தடைகள் தாண்டி அடையவேண்டும். கதையின் திருப்பங்களுக்கு தொடர்புடையவனாக இருக்கவேண்டும்.

1.    கதையின் தேவை

மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்ற அப்பாக்களின் வாழ்க்கையை வாழ நினைக்கும் கல்யாணிதான் முக்கிய கதாபாத்திரம்.

2.    கதையை செலுத்த கதாபாத்திரம்

மகளின் பள்ளிகட்டணத்தைகூட செலுத்தமுடியாத தந்தை தன் மகள் கேட்டதற்காய் வோடாபோன் நாய்குட்டி வாங்க படும் பாடு.

கதைமாந்தர்களின் குணாதிசயம்

தந்தையான தன் மகன் இப்படி சமுதாயத்தின் சாபங்களோடு வாழ பழகவில்லையே என்ற கவலையோடு ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற இந்த சமுதாயத்தின் நிகழ்கால தந்தை.

தன் காதல் கனவனோடு பணமிருக்குமிடத்தில் பணமில்லாமல் வாழ்வை எதிர்கொள்ளும் மனைவி.

தான் என்ன கேட்டாலும் அப்பா வாங்கிதருவார் என்ற நம்பிக்கையில் குழந்தைகளுக்கான கனவுகளோடு பறந்து திறியும் மகள்.

தன் மகள் நிலவைக்கேட்டாலும் வானேறி பரித்துதர ஆசைப்படும் தந்தை.

இவர்களுக்கூடாக அன்பும் அக்கரையுமாக ஒரு தாய் ஒரு சகோதரி இரு கொச்சின் நண்பர்கள் மற்றும் ஹைகூவாக எவிட்டா மிஸ், மகளின் தோழி, தனியார் பள்ளி மற்றும் ஆசிரியர்கள், இன்னும் சிலரோடு ஒரு குரங்கும் தங்க மீன்களும் மலைகளும்.

கதையின் திருப்பங்களில் கதைமாந்தர்கள்

செல்லம்மாவை செத்துபோகட்டும் என்று சொன்ன தன் மகனை அடிக்கும் தந்தை.

பள்ளிக்கட்டணத்தை கூட கட்டஇயலாத தந்தையிடம் வோடாபோன் நாய்குட்டி வாங்கிவரச் சொல்லும் செல்லம்மா.

கதையின் சூழல்

கதைக்கான சூழ்நிலை கதையை தாங்கவேண்டும். கதை சம்பந்தப்படாத சூழலில் காட்சிப்படுதினால் கதை ஒட்டாது.

தங்கமீன்களில் வேலைக்காக வெளியூர் செல்லக்கூடிய ஆனால் தனியார் பள்ளிக்கூடம் இருக்கிற ஒரு நடுத்தர கிராமம் அங்கே ரயில் ஓட வேண்டும் பேருந்து ஓட வேண்டும் மலைகள் இருக்கவேண்டும் குளம் இருக்க வேண்டும் இன்னும் நிறைய்ய வேண்டும்.

காட்சிகளை வெவ்வேறு இடங்களில் காட்சிப்படுத்தி இணைப்பது ஒரு கலை ஆனால் கதை தாண்டிய காட்சியமைப்புகள் பேசாது.

இப்படி கதையின் துவக்கத்தில் நாம் கதை மாந்தர்களையும் கதை எதை நோக்கி செல்கிறது என்பதையும் கதை மாந்தர்களின் குணாதிசயங்களையும் கதை நடக்கும் சூழலையும் விளக்கிவிட வேண்டும் மேலும் இன்னொரு வேண்டும் இருக்கிறது அதன் பெயர் PLOT POINT.


அதைப்பற்றி தொடர்ந்து பார்க்கலாம் – திரைப்பட மாணவன்

Wednesday, February 19, 2014

Structure of screenplay


நான் பார்த்த வரையில் திரைப்படங்களில் 3 விஷயங்கள் தொடர்ச்சியாக இருக்கிறது அது... 

 துவக்கம்இடைவேளைகிளைமாக்ஸ்

1. துவக்கம் - Introductionகதைக்கு நம்மை தயார் செய்யும் நிலை

பொதுவாக கதையின் கதா பாத்திரங்களை, கதபாத்திரங்களின் தன்மையை,  கதை நடக்கும் தளத்தை  நமக்கு அறிமுகம் செய்பவையாக இருக்கிறது


2. இடைவேளை - கதையை இன்னும் விறுவிறுப்பாக்க இன்னுமொரு தளத்திற்கு எடுத்து செல்லும் நிலை  

ஒரு முடிச்சை போட்டு அதை அவிழ்ப்பதுதான் கதை என்று வைத்துகொண்டால் அந்த முடிச்சை போடுமிடம் 

3. முடிவு - கிளைமாக்ஸ்கதையின் தீர்வு  

கதையின் முடிவும் கதை நமக்கு சொல்ல வரும் தீர்வும்.

இந்த அமைப்பை அனேக திரைப்படங்களில் நாம் பார்க்கலாம். 

சினிமாவில் first half, second half  என்று சொல்வார்கள் 

கதையில் first half இடைவெளியை நோக்கி நகரும் second half கிளைமாக்ஸ் நோக்கி நகரும் 

இதை திரைக்கதையின் பிதாமகன் என அழைக்கப்படும்  சிட் ஃபீல்ட் Three Act Structure என விவரிக்கிறார், திரைக்கதை என்பது ஒரு process என்கிறார் அது ஒன்றன் பின் ஒன்றாக கட்டமைக்கப்படவேண்டிய ஒன்று.

திரைப்படங்களில் நாம் காணும் பகுதிகள்

First half
Second half
Intro
Interval
Climax

Three Act Structure



படப்பிடிப்புதளத்தில் யார்? என்ன? எப்போது? எங்கே? ஏன்? எப்படி? போன்ற எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கும் காகிதமே திரைக்கதை.

இந்தக் கேள்விகளுக்கும்  3 act structure க்கும் என்ன சம்பந்தம்? தொடர்ந்து விரிவாக பார்க்கலாம் – திரைப்பட மாணவன்

Monday, February 17, 2014

Screenplay

இயற்கையாகவே ஒரு கதையை கேட்கும்போது அதன் visual காட்சி நம் மணக்கண்ணில் தோன்றுவது இயல்பு அதை திரைப்படுத்துவதற்க்கான இன்னொரு எழுத்தின் வடிவம் திரைக்கதை என்றே நான் கருதுகிறேன்.

அதில் காட்சியின் விளக்கங்கள் மட்டுமில்லாது கேமராவின் கோணங்கள், நடிகனிடமிருந்து வெளிப்படவேண்டிய நடிப்பு குறிப்புகள், வசனம்காட்சி நடக்கும் தளம் மற்றும் கால குறிப்புகள், தளத்தில் இடம்பெறவேண்டிய விஷயங்கள் குறித்த விவரங்கள் முழுமையானதாக இருக்கவேண்டும்.

மேலும் நடிகர் சம்பந்தப்பட்ட காட்சிகளையோ, இடம் சார்ந்த காட்சிகளையோ அல்லது நேரம் சார்ந்த காட்சிகளையோ பிரிப்பதற்கு எதுவாக இருத்தல் இன்னும் சிறப்பு.

ஆனால்

திரைக்கதை என்பது நாடகத்திற்க்காகவோ நாவலுக்காகவோ எழுதப்படுபவை அல்ல ஒரு கதையை திரையில் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் காட்சிகளாக விவரிப்பது

A story told in pictures.

இரண்டு பேர் பேசிப்பேசி மாய்ந்தால் அது நாடகம், சம்பவத்தை வர்ணித்தால் அது சிறுகதை அல்லது நாவல் என்கிறார் திரு.சுஜாதா அவர்கள்.

காட்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட கால அளவுகளில் அடங்கவேண்டியவை ஆதலால் ஒரு காட்சி எத்தனை நேரம் பிடிக்கும் என்றும் ஒரு காட்சியை நாம் எத்தனை shot களாக பிரிக்கிறோம் என்றும் அந்த shot களுக்கான நேரத்தை பற்றிய தெளிவு அவசியம் வேண்டும் என்றே கருதுகிறேன்.


கதையை நாம் எப்படி சொல்ல போகிறோம் என்ற உயர்ந்த யோசனையிளிருந்தோ அல்லது வித்தியாசமான உக்தியிலிருந்தோ அல்லது மறக்க முடியாத ஒரு கதா பாத்திரத்தின் வளர்ச்சியில் திரைக்கதை துவங்குகிறது.  

One line ஆக விரியும் Outline. திரைகதை எழுதும் முன் கதையின் ஆரம்பம், முடிவு, மற்றும்  முக்கிய நிகழ்வுகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும் ( Beginning, End, turning point, main  scenes, important Plots ) 

காட்சிகள் அனைத்துமே கதையை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்

திரை என்பது visual media ஆகவே வசனங்கள் மூலமாக பேசுவதை விட காட்சிகள் மூலம் பேசுவதே சிறந்தது.

தேவையான காட்சிகள்,  தேவையான வசனங்கள், நேர்த்தியான காட்சியமைப்பு இவையனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தெளிவாக பார்வையாளருக்கு புரியும்படியாக திரைக்கதை அமைய வேண்டும் என்று கருதுகிறேன்.

திரைக்கதை என்பது காட்சிகளின் தொகுப்பு, ஒரு சம்பவம் காட்சிகளினாலும் வசனங்களாலும் விவரிக்கப்படுவது.
­
திரைக்கதை எழுதும்முன் நாம் தெளிவாக முடிவு செய்ய வேண்டியவை
நமது ஐடியா என்ன?
சப்ஜக்ட் என்ன?
யாரால் என்ன நடக்கிறது ?
அதன் முடிவு என்ன?


திரைக்கதையின் அமைப்பை பற்றி தொடர்ந்து படிக்கலாம் – திரைப்பட மாணவன்

Friday, February 14, 2014

Story

கதை என்றால் என்ன ?

பொழுதுபோக்கிற்காக ஒரு மனிதனையோ அல்லது ஒரு நிகழ்வையோ பற்றி உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ கூறப்படுவது

ஒருவரின் வாழ்க்கை அல்லது ஏதாவது வளர்ச்சி கடந்த நிகழ்வுகளின் தொகுப்பு. -  என்கிறது google.

கதையின் இலக்கணம் ?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்றபோதிலும் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் விருவிருப்பாக இருக்கும் கதைகள் பெரும்பாலும் ஜெயிக்கின்றன.

கதையின் பிறப்பு

கதையை எங்கேயிறுந்து பிடிக்கலாம் ? எங்கேயிறுந்து வேண்டுமானாலும். பொதுவாக IDEA.

Subject
சப்ஜெக்ட் என்பது வாழ்க்கையில் இருக்கிறது என்கிறார் மறைந்த திரையுலகின் ஜாம்பவான் திரு.சுஜாதா அவர்கள். சப்ஜெக்ட் என்பது கதைக்கு ஒரு கதாபாத்திரம் செய்யும் செயல் ஆதாரமாக விளங்குவது. ஒருவன் தவறை உணர்ந்து தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை காப்பாற்றுவதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

Knot, Thought or Premise
நாம் பேசும்போது இப்படி இருந்தா எப்படி இருக்கும் ? அப்படி நடந்தா எப்படி இருக்கும் ? என சிலோகிப்பது உண்டு அதைதான் ப்ரிமைஸ் என்கின்றோம். ஒரு ரோபோவுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் வந்தால் எப்படியிருக்கும்? என்ற கேள்விதான் எந்திரன்

மேலே குறிப்பிட்டுள்ளவைகளை பொதுவக IDEA என்பார்கள், இந்த IDEAவை சுற்றி பின்னப்படுவதுதான் கதை.


திரைக்கான கதையை எப்படி அமைப்பது என்பதை தொடர்ந்து படிக்கலாம் – திரைப்பட மாணவன்