சினிமா தயாரிப்பில் மூன்று முக்கிய வார்த்தைகள் அடிக்கடி அடிபடும் அது,
1. Pre-production
2. Production
3. Post-production
சினிமாவின் வியாபாரத்திற்குள் போகாமல் சினிமா தயாரிப்பை மேற்கூறிய மூன்று வகையாக பிரிக்கலாம் .
Pre-production
என்னை பொறுத்தவரை Pre-production வேலைகளை சரியாகமுடித்துவிட்டால் படத்தின் வெற்றி துவங்கிவிட்டது என்றே கருதுகிறேன்.
Pre-production அப்படின்னா என்ன?
ஒரு வீடு கட்டுரத்துக்கு முன்னாடி ஒரு வீடு எப்படி வரணும் எங்க என்ன மாதிரி அறைகள் வேணும் அகலம் எவ்வளவு நீளம் எவ்வளவுன்னு ஒரு பிளான் போடுவோம் அப்புறம் அதற்கேற்றால்போல் எதனை அடி குழி வெட்டனும் சாரம் எவ்வளவு போடணும் கல் எவ்வளவு வேணும் சிமெண்ட் எவ்வளவு வேணும் இன்னும் மணல் ஜல்லி மரம் அதுமட்டுமில்லாம ஆட்கள் எத்தன பேர் வேணும் அவர்களுக்கான தேவைகள்ன்னு நாம தயாராகவேண்டியது எவ்வளவோ இருக்கு.
அதே மாதிரிதான், சினிமா எடுக்குறதுக்கு முன்ன என்ன கதை, அந்த கதைக்கு என்னெல்லாம் வேணும்னு நாம அதுக்கு Pre-production
இதுல முக்கியமா நாம பார்க்கபோறது.
கதை - Story, திரைக்கதை - Screenplay, Storyboard, Location, Sets and Properties, Budget, Schedule
Production
சினிமாவில் Production என்பது ஷூட்டிங். கதையை விஷுவலாக்குறதுதன் Production. இதுல முக்கியமா நாம பார்க்கபோற கேமரா - Camera, லென்ஸ் - Lens, கேமரா கருவிகள் - Gears, விளக்குகள் - Lights, ஒளித்ததடுப்பான்கள் - Filter, மின் சக்தி - Power Sources, புகைப்பட கலைஞர் - Stills மட்டுமல்லாது படப்பிடிப்பு தளத்தின் வசதிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து என இது ஒரு நகரும் தொழிற்சாலை.
Post-production
நமது படைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாது அதன் வியாபாரத்திற்கு பெரிதும் உதவுவது Post-production. இதில் எடிட்டிங் - Editing, Visual Effects, Sound Effects, Music, Animations, DI
மட்டுமில்லாது போஸ்டர் டிசைன் விளம்பரம்னு நிறைய இருக்கு.
அடுத்தடுத்த பக்கங்களில் விரிவாக பேசலாம்...
(பதிவுகள் அனைத்துமே உங்களின் பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்தப்படும்)

