இடை நிலை / அங்கம் 2 / ACT 2 / Middle /
Confrontation / 60 pages / 60 minutes
இது முதலாவது அங்கத்தின் தொடர்ச்சியாகவும்
3வது அங்கத்தின் காரணமாகவும் Interval Blockக்கு ஆதாரமாக இருக்க
வேண்டும். கதையின் காட்சிகள் அனைத்துமே கதையை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல
வேண்டும். கதையை இன்னும் விருவிருப்பாக்க இந்த பகுதியில் சிறப்பான காட்சிகளால் நிறப்பப்பட
வேண்டும். இங்கே தொய்வு ஏற்பட்டால் “என்னடா இந்த இழுஇழுக்குறான்ஞ” என்று
பார்வையாளர் கொட்டவி விட ஆரம்பித்து விடுவார்.
இதை தங்கமீன்களில் கொஞ்சம் Reverseல்
பார்ப்போம்
Intervalலில் கல்யாணி வீட்டை விட்டு வெளியேருகிறான்
– ஏன்? அவன் அப்பாவிடம் அறை வாங்குகிறான் – ஏன்? பள்ளிக்கூடத்தில் பிரச்சனை செய்கிறான் – ஏன்?
பள்ளிக்கூடத்தில் செல்லாம்மாவிற்கு W என பெயர் வைக்கிறார்கள்.
. 3ம் அங்கத்தில் Rain Maker தேவை - Rain Maker ஐ கொண்டுவந்தால் 25000ரூபாய் கிடைக்கும் –
25000ரூபாய் இருந்தால்தான் வோடாபோன் நாய் கிடைக்கும் – வோடாபோன் நாய்
இருந்தால்தான் பிறந்தநாளுக்கு மகளுக்கு பரிசாய் தர இயலும் – அதற்கு பிறந்த நாள் வர
வேண்டும் – அன்றைய பரிசாக வோடாபோன் நாயை மகள் பரிசாக கேட்கவேண்டும்.
இப்படி ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகளாக
இருக்க வேண்டும். தொடர்ந்து அங்கம் 3ஐ பார்க்கலாம் - திரைப்பட மாணவன்
No comments:
Post a Comment