முடிவு / அங்கம் 3 / Act 3/ End / Resolution =
30pages =30minuts
”நல்ல படம் க்ளைமாக்ஸ்ல சொதப்பீட்டாண்டா”
என்று பார்வையாளர் சொல்லி பலபடங்கள் தோல்வியடைய காரணமிந்த முடிவு. முக்கிய
கதாபாத்திரத்தின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா? பிரச்சினைகளின் முடிவு என்ன?
முடிவு என்பது இறுதி காட்சியல்ல.
பெரும்பாலும் சுமூகமான முடிவைதான் பார்வையாளர்
விரும்புகிறார் இல்லையென்றாலும் நியாயம் ஜெயிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான
பார்வையாளரின் எண்ணமாக இருக்கிறது. இல்லை என் படத்தில் எதார்த்தம் ஜெயிக்க
வேண்டும் என்றால் அதற்கான நியாயம் படத்திலிருக்க வேண்டும்.
எதார்த்தமான முடிவுகள் தோற்பதற்கு காரணம்
சாமானியனின் வாழ்வில் நடப்பதையே பிரதிபலிப்பதால் இருக்கலாம். தான் வஞ்சிக்கப்பட்டதைபோல் கதையில் ஒருவன்
வஞ்சிக்கப்படுவது அவனுக்கு நெருக்கமானதாக இருந்தாலும் தன்னால் வெல்ல முடியாததை
நாயகன் வெல்ல வேண்டும் என்றே பார்வையாளர் விரும்புகிறார்.
அதற்காக திடீரென்று சம்பந்தமே இல்லாத ஒரு
கதாபாத்திரம் முன்வந்து எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பது பலசமயங்களில் பயன்
தராது. அதேபோல் நாயகன் திடீரென்று குதித்து கதாநாயகியை காப்பாற்றுவதெல்லாம்
மலையேறிவிட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு நியாயம் வேண்டும். கடைசியில் போலீஸ் வரவேண்டுமென்றால் போலீஸுக்கு
தகவல்வந்தது எப்படி? அவர்கள் எப்படி வந்தார்கள் என்பதையும் காட்ட வேண்டும் அதே
நேரத்தில் காட்சியை விறுவிறுப்பாக்கவும் அமைக்கவேண்டும்.
தங்கமீன்களின் முடிவில் கல்யாணி வருவதற்குள்
செல்லம்மா குளத்தில் இறங்கிவிடுவாளா? என்ற பதட்டத்தில் நமது மனநிலை மாறிமாறி
அல்லல்படும் அந்த அளவிற்கு அருமையான தொகுப்பு அது. அதே நேரத்தில் சில விசயங்களை
சொல்லாமல் விடுவதும் அழகு அதில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும் சந்தேகத்தோடு
நம்பிக்கைபோல் ஒருஎதிர்பார்ப்பு கிளம்பும் தங்கமீன்களில் கல்யாணி நாயை வாங்கினாரா?
என்பது போல்.
Ok தொடர்ந்து திரைக்கதையை ஆரம்பிக்கும் முன்
ஒரு check list பார்க்கலாம் - திரைப்படமாணவன்
No comments:
Post a Comment