திரைக்கதையை ஆரம்பிக்கும்முன் நாம் தெளிவாக
இருக்கவேண்டியவை.
1.
கதையின் முக்கிய கதாபாத்திரம் யார்?
2.
கதை எதை பற்றியது?
3.
கதையின் முடிவு என்ன?
உதாரணம் – 2013ம் ஆண்டில் பல விருதுகளை
வாங்கிய என் துரோணாச்சாரியார் இயக்கிய >@>தங்கமீன்கள்<@<
கதை எதைப்பற்றியது – இன்றைய சமுதாய சூழலில்
குழந்தையும் கல்வியும்
துவக்கம் /அங்கம் 1 / Act 1 / Beginning / setup = 30pages =30minuts
கதை ஒரு புள்ளியில் துவங்கி அது படிப்படியாக
பல தடைகளை தாண்டி இறுதிகட்டத்துக்கு செல்லும். அந்த புள்ளி ஒரு சம்பவமாகவோ, ஒரு
நிகழ்வாகவோ அல்லது ஒருவரின் செயலாகவோ இருக்கலாம் ஆனால் கதையின் முடிவு பற்றி நாம்
தெளிவாக இருந்தால்தான் கதையை சிறப்பாக துவக்கமுடியும்.
ஒரு நல்ல துவக்கம்
இறுதியில் தங்க மீனாக ஆசைப்பட்டு செல்லம்மா
குளத்தில் இறங்க வேண்டும் என்ற முடிவுதான் இங்கே துவக்கதிற்கு ஆதாரம். கதையை
எப்போது ஆரம்பிப்பது? அது கதையை பொறுத்தது என்றாலும் விரைவாக ஆரம்பித்தலே நலம்
இல்லையென்றால் படத்த போடு என்று பார்வையாளர் சத்தம் போடுவார். சிலர் முதல்
காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுவார்கள்.
திரைக்கதை என்பது தகவல்களால் நிறைந்தது. தங்க
மீன்களின் முதல் காட்சியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள்.
1.
தங்கமீன்களின் மேல் செல்லம்மாவிற்கு இருக்கும் ப்ரியம்.
2.
வீட்டிற்கு தெரியாமல் அவள் வெளியே வருவது.
3.
மகளுக்காக எந்த ஆழத்திலும் இறங்கும் கல்யாணி.
4.
இதுவரைக்கும்தானே வந்திருக்கு எனும் செல்லம்மாவின்
வெகுளித்தனம்.
5.
தந்தைக்கு ஒண்றென்றால் பதறிவிடும் செல்லம்மா.
இப்படி நிறைய...
இப்படி நிறைய...
கதையின் மையத்தை நோக்கிய ஆரம்பம்
கதையின் மையம் - 2000ரூபாய்க்கு கூட வழியில்லாத
கல்யாணிக்கு 25,000ரூபாய் தேவை
முதல் 30 நிமிடங்களிலேயே கதையின் மையத்தை
பார்வையாளருக்கு விளக்கிவிட வேண்டும். அதற்க்கான முக்கிய காட்சி முதல் 10 நிமிடங்களுக்குள்
வந்துவிட வேண்டும்.
இவந்தனே அப்பன் – என தந்தை சொல்ல 2000ரூபாயின் தேவை
கல்யாணிக்கு வந்து விடுகிறது. இனி அவன் 2000ரூபாயை நோக்கி ஓடுவான்.
முக்கிய கதாபாத்திரம் / Protogonist
முக்கிய கதாபாத்திரம் என்பது அதன்
தேவையையும் அதை கதையில் செலுத்துவது எது என்பதையும் பொருத்தது. அது நாயகனாகவோ
வில்லனாகவோ நாயகியாகவோ ஏன் குரங்காகவோ நாயாகவோக்கூட இருக்கலாம். அது தனது
விருப்பத்தை பல தடைகள் தாண்டி அடையவேண்டும். கதையின் திருப்பங்களுக்கு
தொடர்புடையவனாக இருக்கவேண்டும்.
1.
கதையின் தேவை
மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது
என்று சொல்லிவிடக்கூடாது என்ற அப்பாக்களின் வாழ்க்கையை வாழ நினைக்கும் கல்யாணிதான்
முக்கிய கதாபாத்திரம்.
2.
கதையை செலுத்த கதாபாத்திரம்
மகளின் பள்ளிகட்டணத்தைகூட செலுத்தமுடியாத
தந்தை தன் மகள் கேட்டதற்காய் வோடாபோன் நாய்குட்டி வாங்க படும் பாடு.
கதைமாந்தர்களின் குணாதிசயம்
தந்தையான தன் மகன் இப்படி சமுதாயத்தின்
சாபங்களோடு வாழ பழகவில்லையே என்ற கவலையோடு ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற இந்த
சமுதாயத்தின் நிகழ்கால தந்தை.
தன் காதல் கனவனோடு பணமிருக்குமிடத்தில்
பணமில்லாமல் வாழ்வை எதிர்கொள்ளும் மனைவி.
தான் என்ன கேட்டாலும் அப்பா வாங்கிதருவார் என்ற
நம்பிக்கையில் குழந்தைகளுக்கான கனவுகளோடு பறந்து திறியும் மகள்.
தன் மகள் நிலவைக்கேட்டாலும் வானேறி
பரித்துதர ஆசைப்படும் தந்தை.
இவர்களுக்கூடாக அன்பும் அக்கரையுமாக ஒரு
தாய் ஒரு சகோதரி இரு கொச்சின் நண்பர்கள் மற்றும் ஹைகூவாக எவிட்டா மிஸ், மகளின்
தோழி, தனியார் பள்ளி மற்றும் ஆசிரியர்கள், இன்னும் சிலரோடு ஒரு குரங்கும் தங்க
மீன்களும் மலைகளும்.
கதையின் திருப்பங்களில் கதைமாந்தர்கள்
செல்லம்மாவை செத்துபோகட்டும் என்று சொன்ன
தன் மகனை அடிக்கும் தந்தை.
பள்ளிக்கட்டணத்தை கூட கட்டஇயலாத தந்தையிடம்
வோடாபோன் நாய்குட்டி வாங்கிவரச் சொல்லும் செல்லம்மா.
கதையின் சூழல்
கதைக்கான சூழ்நிலை கதையை தாங்கவேண்டும். கதை
சம்பந்தப்படாத சூழலில் காட்சிப்படுதினால் கதை ஒட்டாது.
தங்கமீன்களில் வேலைக்காக வெளியூர்
செல்லக்கூடிய ஆனால் தனியார் பள்ளிக்கூடம் இருக்கிற ஒரு நடுத்தர கிராமம் அங்கே
ரயில் ஓட வேண்டும் பேருந்து ஓட வேண்டும் மலைகள் இருக்கவேண்டும் குளம் இருக்க
வேண்டும் இன்னும் நிறைய்ய வேண்டும்.
காட்சிகளை வெவ்வேறு இடங்களில்
காட்சிப்படுத்தி இணைப்பது ஒரு கலை ஆனால் கதை தாண்டிய காட்சியமைப்புகள் பேசாது.
இப்படி கதையின் துவக்கத்தில் நாம் கதை
மாந்தர்களையும் கதை எதை நோக்கி செல்கிறது என்பதையும் கதை மாந்தர்களின் குணாதிசயங்களையும்
கதை நடக்கும் சூழலையும் விளக்கிவிட வேண்டும் மேலும் இன்னொரு வேண்டும் இருக்கிறது
அதன் பெயர் PLOT
POINT.
அதைப்பற்றி தொடர்ந்து பார்க்கலாம் –
திரைப்பட மாணவன்
No comments:
Post a Comment